என்னா கெத்து.! செம மாஸாக வெளிவந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ராதிகாவின் புகைப்படம்! ஏன்? எதனால் பார்த்தீங்களா??

என்னா கெத்து.! செம மாஸாக வெளிவந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ராதிகாவின் புகைப்படம்! ஏன்? எதனால் பார்த்தீங்களா??


Actress Radhika kolai movie poster  make controversy

தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலகட்டங்களில் பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ராதிகா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தனர்.

அவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கி பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மாவாக மற்றும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த யானை படத்தில் அருண் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார். 

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு தாயாக நடித்துள்ளார்.  விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொலை படத்தில் ராதிகா கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

Radhika

அதில், கையில் சிகரெட்டுடன் சோபாவில் கால்மேல் கால்போட்டு கெத்தாக ராதிகா அமர்ந்துள்ளார். இந்த போஸ்டர் வைரலான நிலையில் ராதிகா கையில் சிகரெட்டுடன் இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.