சினிமா

பாசத்தை பகிர்ந்த ஜோடி...நடிகை பிரியங்கா சோப்ரா கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம்!

Summary:

நடிகை பிரிங்கா சோப்ரா கணவருடன் உள்ள ரொமான்டிக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வரு

நடிகை பிரிங்கா சோப்ரா கணவருடன் உள்ள ரொமான்டிக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் ஹிந்தியில் 2003-ம் ஆண்டு தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் பாலிவுட் சென்ற இவர் அங்கு கொடிக்கட்டி பறந்தார். தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் பிரியங்கா. 

இந்நிலையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி இவர்களது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும்படி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கணவர் கட்டிஅனைத்து முத்தமிட்டப்படி உள்ள ரொமான்டிக் புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி எக்கச்சக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 


Advertisement