சினிமா

தோளுக்கு மேல் வளர்ந்த மகனுடன் 44 வயது சீனியர் நடிகை போட்ட குத்தாட்டம்..! வைரல் வீடியோ..!

Summary:

Actress pragathi master coming dance video

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பிரகதி. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்திருப்பார். தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சீரியலில் கலக்கிவருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் பிரகதி.

இந்நிலையில், கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ள நிலையில், தனது மகனுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் வரும் மாஸ்டர் கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் பிரகதி.

தற்போது 44 வயதுக்கும் நடிகை பிரகதி தனது மகனுடன் இணைந்து வேஷ்டி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ரசிகர்கள் அவரை புகழ்ந்துவருகின்றனர்.


Advertisement