விமான நிலையத்திற்கு வந்த நடிகை பூஜா ஹெக்டே... அவருக்கு காத்திருந்த ஷாக்...! வைரலாகும் வீடியோ இதோ....

விமான நிலையத்திற்கு வந்த நடிகை பூஜா ஹெக்டே... அவருக்கு காத்திருந்த ஷாக்...! வைரலாகும் வீடியோ இதோ....


Actress poojahegde in mumbai airport

மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா ஹெக்டே. முதல் படமே பெரும் தோல்வியில் முடிந்த நிலையில் அவருக்கு அதன்பின் பெரிய வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. அதன்பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அங்கு நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் அடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் தமிழில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்த நிலையில் பல வருடங்கள் கழித்து பீஸ்ட் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. 

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள  மும்பை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு வந்த போது அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. அவர் காரை விட்டு இறங்கியதும் அவரது ரசிகர்கள் கூட்டமாக நின்று அவரை வாழ்த்தி பேனர் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்த பூஜா  ஹெக்டே  இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். இதோ  அந்த வீடியோ காட்சி...