சினிமா

முதல்முறையாக அம்மாவாக களமிறங்கும் நயன்தாரா - குவியும் பாராட்டுக்கள்

Summary:

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த டிமான்டி காலினி என்ற திகில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்திற்கு பிறகு அவரது இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் "இமைக்கா நொடிகள்". 

தொடர்புடைய படம்

தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் காவல் அதிகரியை பற்றிய படமாக "இமைக்கா நொடிகள்" உருவாக்கப்பட்டுள்ளது. 

nayanthara in imaika nodigal க்கான பட முடிவு

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி, அதர்வா, ராஷி கண்னா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

பில்லா திரைப்படத்திற்கு பிறகு, முற்றிலும் அதிரடியான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கும் அடுத்த படம் "இமைக்கா நொடிகள்".

nayanthara in imaika nodigal க்கான பட முடிவு

முற்றிலும் திகில் கலந்த த்ரில்லர் படமாக தயாராகியுள்ள "இமைக்கா நொடிகள்" இந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்தப் படத்தில்  நயன்தாரா நடிப்பைப் பெற்றி ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் கூறியதாவது, “நயன்தாரா வெறும் மேக்கப் போட்டுக்கொண்டு மட்டும் கேமரா முன்பு வருவதில்லை. அதன் மொழியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தன்னை சரியாக வெளிப்படுத்தும் திறமை வாய்ந்தவர்” எனப் பாராட்டி உள்ளது.
 


Advertisement