சினிமா

இத்தனை கோடிக்கு பிரபல தொழிலதிபருடன் நடிக்க தயாரான நடிகை நயன்தாரா - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

Summary:

Actress nayanthara

தமிழ் சினிமாவில் இன்று அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய சூழ்நிலையில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டுள்ள ஒரே நடிகை நயன்தாரா தான். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்,விஸ்வாசம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

இந்நிலையில் தற்போது மிக பெரிய தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள். இவர் தன் தொழிலுக்கு தேவையான விளம்பரங்களை தயாரித்து வருகிறார். மேலும் விளம்பரங்களில் பிரபல நடிகைகளுடன் தானும் இணைந்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் முப்பது கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் புதிய கதையில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். அப்படத்தை அருளை விளம்பரங்களில் நடிக்கவைத்த ஜே. டி மற்றும் ஜெரி ஆகிய இயக்குனர்கள் இப்படத்தினை இயக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு முன்பு நடிகை நயன்தாரா 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பிரபலத்துடன் நடிக்க மாட்டேன் என கூறிய நயன்தாரா தற்போது இப்படத்தில் நடிப்பதால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.


Advertisement