சினிமா

வாவ்.. கர்ப்பமாக இருக்கும் பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! லைக்ஸ்களை குவிக்கும் முதல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாக்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. ஒரு குடும்பத் தலைவியின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமியாக சுசித்ரா நடிக்கிறார். மேலும் அவருக்கு கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.

மேலும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நந்திதா ஜெனிபர். இவர் பாக்கியலட்சுமியின் தோழியாகவும், அவரது கணவர் கோபிநாத்தின் முன்னாள் காதலியாக, நெருக்கமான கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். மேலும் ஜெனிஃபர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெனிஃபர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரம் நெகட்டிவாக செல்லவிருப்பது என கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஒரு மகன் இருக்கும் நிலையில் தான் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கர்ப்ப காலத்தில் முதன்முறையாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement