சினிமா

முழுவதுமாக கவர்ச்சிக்கு மாறிய பிரபல நடிகை! ஷாக் புகைப்படங்கள்!

Summary:

Actress nandhitha modern look photos goes viral

அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நந்திதா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார் நந்திதா.

அதன்பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படமும் வெற்றிபெற்றது. அதன்பின்னர் முண்டாசுப்பட்டி படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் விஜய்க்கு மனைவியாக சிறு வேடத்தில் நடித்திருந்தார் நந்திதா. பொதுவாக தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் குடும்ப பெண்ணாக, பவாடை தாவணி, சேலையில் நடிக்கும் நந்திதா தற்போது படு மாடர்னாக தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நந்திதா வெளியிட்ட படங்களுக்கு அவரது ஃபாலோயர்களுக்கு மத்தியில் செம ரெஸ்பான்ஸ். ஆனால் பெரும்பாலான கமெண்டுகளில் ‘பாவம் இந்தப்புள்ள ரொம்ப கஷ்டத்துல இருக்குது போல. கிழியாத ஒரு நல்ல டவுசர் வாங்கிக்கொடுங்கய்யா’ என்றே சிபாரிசு செய்கிறார்கள்.


Advertisement