சினிமா

பெரும் சோகம்! நடிகை நந்திதா ஸ்வேதா வீட்டில் நேர்ந்த எதிர்பாராத மரணம்! வருத்தத்துடன் திரைப்பிரபலங்கள் ஆறுதல்!!

Summary:

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நட

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது மிகவும் வேதனையுடன் வெளியிட்ட பதிவு அனைவரையும் வருத்தமடைய வைத்துள்ளது.

அதாவது நந்திதா தன் டுவிட்டர் பக்கத்தில், 54 வயதான என் தந்தை திரு. சிவசாமி இறந்துவிட்டார் என்பதை என் நலம்விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நடிகை நந்திதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 


Advertisement