சினிமா

கொரோனா பாதிப்பு! திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ் பட பிரபல நடிகை! வருத்தத்தில் குடும்பத்தினர்!!

Summary:

தமிழ் சினிமாவில் நெஞ்சம் துணிவிருந்தால் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவ

தமிழ் சினிமாவில் நெஞ்சம் துணிவிருந்தால் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாதா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷ் நடிப்பில் வெளிவந்த  பட்டாஸ் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மெஹ்ரீனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பஜன்லாலின் பேரன் பாவ்யா பிஷ்னோய் என்பவருடன் திருமணம் செய்ய ஜெய்ப்பூரில் உள்ள Alila Fort Bishangarh அரண்மனையில்  கோலகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணத்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வந்தது.

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ்பட நடிகை! |  Actress Mehreen Pirzada plans to postponed her marriage due to pandemic -  Tamil Filmibeat

இந்நிலையில் மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மெஹ்ரின், கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.


 


Advertisement