சினிமா

வாவ்..!! மீனா மகள் தெறி பேபி நைனிகாவா இது..? ஹீரோயின் போல் மாறிட்டாரே..!! வைரல் புகைப்படம்..

Summary:

தெறி பேபி நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெறி பேபி நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்றுவரை மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மீனா. 90 காலகட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வந்த இவர், தனது  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் மீனா.

இந்நிலையில் மீனாவின் மகள் பேபி நைனிகா விஜய் நடித்த தெறி படத்தில், விஜய்யின் மகளாக நடித்தார். தெறி படத்தில் நைனிகாவின் அழகான மற்றும் திறமையான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நைனிகாவின் நடிப்பு தெறி படத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

தெறி படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நைனிகா நடித்திருந்தாலும் தெறி படம் அளவிற்கு அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது படிப்பில் கவனம் செலுத்திவருகிறார் நைனிகா. இந்நிலையில் தெறி படத்தில் குழந்தையாக இருந்த நைனிகா தற்போது சற்று வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.

அவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement