ப்பா.. நாளா பக்கமும் எலுமிச்சைபழ கலரு.... பிக்பாஸ் லாஸ்லியாதானா இது...! வைரலாகும் புகைப்படங்கள்...

ப்பா.. நாளா பக்கமும் எலுமிச்சைபழ கலரு.... பிக்பாஸ் லாஸ்லியாதானா இது...! வைரலாகும் புகைப்படங்கள்...



Actress losliya latest photo

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே சிறு பிள்ளை போன்ற தனது செயலால், சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தார். மேலும் அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது. அதனைத் தொடர்ந்து அவர் போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சினிமாவில் பிஸியாகிவிட்டார். அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது  மாடர்ன் உடையில் செம  ஃபிட்டாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.