விஜய் இரண்டே நாட்கள் நடித்து பின்னர் வேறொரு நடிகர் ஹீரோவாக நடித்த முதல் படம்!

விஜய் இரண்டே நாட்கள் நடித்து பின்னர் வேறொரு நடிகர் ஹீரோவாக நடித்த முதல் படம்!


actress-laila-shared-unnai-ninaithu-movie-unknown-detai

தற்போதைய தமிழ் சினிமாவின் தாரக மந்திரம் தளபதி விஜய். மாபெரும் ரசிகர்ப்படலத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் தற்போது சர்க்கார் படத்தில் பிசியாக இருக்கிறார். சர்க்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தளபதி விஜய்.

இந்நிலையில் தளபதி விஜய் இரண்டே நாட்கள் நடித்து பின்னர் அந்தப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை லைலா.

Sarkar

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் உன்னை நினைத்து.

கதை, நடிப்பு, பாடல் என படத்தின் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது. தங்கும் விடுதியில் சாதாரண இளைஞராக வேலைபார்த்து தனக்கு பிடித்த பெண்ணிற்காக அனைத்தையும் செய்வார் சூர்யா. பின்னர் அந்த பெண் அவரை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பதுபோல் கதை நகரும்.

Sarkar

அன்றைய சமயத்தில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இந்த படம் பற்றி நடிகை லைலா கூறுகையில் உன்னை நினைத்து’ படத்துல முதலில் விஜய் சார்தான் ஹீரோவா கமிட்டாகியிருந்தார். அந்தப் படத்துக்காக ஒரு பாடலை ரெண்டுநாள் ஷூட் பண்ணாங்க. பிறகு சில பிரச்சனைகளால் அந்தப் படத்துல விஜய் சார் நடிக்கல.

நான் அவர்கிட்ட, ‘உங்க ஒருத்தரோடதான் ஷூட்டிங் வரைக்கும் வந்து என்னால நடிக்க முடியாமப்போச்சு. கண்டிப்பா ஒருநாள் உங்ககூட நடிப்பேன்’னு அடிக்கடி சொல்லியிருக்கேன். அது இப்போவரை நடக்கலை. செகண்ட் இன்னிங்ஸ்ல லக் இருக்கான்னு பார்ப்போம் என்று கூறியுள்ளார் நடிகை லைலா.