ரஜினி, கமல், அஜித், விஜய் தயவுசெய்து உதவுங்கள்! கெஞ்சி கேட்டு பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ!Actress kutty padmini post video

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் வைரஸ் பரவிய நிலையில் 3,300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Kutty padmini

இந்நிலையில் திரையுலகை சார்ந்த FEFSI ஊழியர்கள் பலர் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாத  அவலநிலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திரையுலகை சார்ந்த பல நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படப்பிடிப்புகள் இல்லாததால் திரையுலக ஊழியர்கள் பலரும் பெருமளவில் சிரமப்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கு ரஜினி,  விஜய், கமல், அஜித் ஆகியோர் உதவி செய்யுமாறு கெஞ்சி  கேட்டுள்ளார். மேலும் உங்கள் நால்வரால் முடியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் நினைத்தால் எதை வேணாலும் செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.