அடேங்கப்பா.. கொழுகொழுவென இருந்த நடிகை குஷ்புவின் மகளா இது? செம ஸ்லிம்மாகி அடையாளமே தெரியாம வேற லெவலில் மாறிட்டாரே!!

அடேங்கப்பா.. கொழுகொழுவென இருந்த நடிகை குஷ்புவின் மகளா இது? செம ஸ்லிம்மாகி அடையாளமே தெரியாம வேற லெவலில் மாறிட்டாரே!!



actress kushbu daughter photo viral

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. அதனைத் தொடர்ந்து அவர் 80ஸ் காலகட்டங்களில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த அவர்  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை குஷ்பு வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கி பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பு, இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே நன்கு உயரமாக, உடல் எடை அதிகரித்து கொழுகொழுவென இருந்தனர்.

இந்நிலையில் இருவருமே தற்போது நன்கு உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளனர். அதிலும் இளைய மகள் அனந்திதா மிகவும் ஒல்லியாகிவிட்டார். இந்த நிலையில் அவரது புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அவரா இது? ஆள் அடையாளமே தெரியாம, வேற லெவலில் மாறிட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.