அடக்கடவுளே.. குஷ்பூவுக்கு இப்படி ஒரு நிலையா?..  வலியால் அவதிப்பட்ட குஷ்பூ..! விமானநிலையத்தில் இது கூடவா இல்ல?.!

அடக்கடவுளே.. குஷ்பூவுக்கு இப்படி ஒரு நிலையா?..  வலியால் அவதிப்பட்ட குஷ்பூ..! விமானநிலையத்தில் இது கூடவா இல்ல?.!


actress-kushboo-tweet-about-air-india

தமிழ் திரையுலகில் 90sகளின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை குஷ்பூ. இவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என பன்முகத்தன்மையை கொண்ட குஷ்பூ, சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது தடத்தை பதித்து வெற்றி பெற்ற குஷ்பூ, பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார். 

tamil cinema

இந்த நிலையில், காலில் அடிப்பட்டு கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் குஷ்பூ வெளியிட்டிருந்தார். மேலும் ஒரு வெளிநாட்டு பயணத்திற்கு தயாரான போது விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும், இருப்பினும் எனது பயணம் நிற்காமல் தொடரும் என்று அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

இதனை தொடர்ந்து நடிகை குஷ்பூ நேற்று காலை வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது கால்வலி அதிகமாக இருந்ததால் சக்கர நாற்காலி தேவைப்பட்டுள்ளது. ஆனால் விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக அவர் வருத்தத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் அதில், "ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரை டேக் செய்து, காலில் காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை?. அரை மணி நேரம் கால்வலியுடன் இதற்காக காத்திருந்தேன். அதன் பின் வேறு ஒரு விமானநிறுவனத்திடம் சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்து சென்றனர்" என்று பதிவிட்டிருந்தார். இப்பதிவால் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்து வருகின்றனர்.

இப்பதிவினை கண்ட ஏர் இந்தியா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அத்துடன் குஷ்புவின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், விமான நிலைய குழுவுக்கு இந்த விவகாரம் உடனடியாக எடுத்துசெல்லப்படும் என்றும் டிவிட்டரில் பதிலளித்துள்ளது.