புதுவீட்டில் டீ குடித்தது குத்தமா?.. வறுத்தெடுத்த நெட்டிசன்களால் கடுப்பான குஷ்பூ.. என்ன செய்தார் தெரியுமா?.!

புதுவீட்டில் டீ குடித்தது குத்தமா?.. வறுத்தெடுத்த நெட்டிசன்களால் கடுப்பான குஷ்பூ.. என்ன செய்தார் தெரியுமா?.!


actress-kushboo-tweet

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ இலண்டனுக்கு சுற்றுலாப்பயணம் சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கும் போட்டோவை அவ்வப்போது தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளபக்கங்களில் பதிவு செய்வது வழக்கம். 

சமீபத்தில் அங்கிருக்கும் வணிக வளாகத்திற்கு சென்று எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவு செய்திருந்தார். அதனைப்போல, இலண்டனில் உள்ள தனது புதிய வீட்டில் முதல் தேநீர் அருந்துவதாக மற்றொரு புகைப்படம் பதிவு செய்யப்பட்டது. 

இதைக்கண்ட பலரும் குஷ்பூ இலண்டனில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார் என வாழ்த்த, சிலர் வெளிநாட்டில் எதற்காக வீடு வாங்க வேண்டும்? என்ற எதிர்கேள்வியுடன் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

இதனால் ஆத்திரமடைந்த குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், "நான் புதிய வீடு என்றே கூறினேன். அந்த வீட்டினை நான் சொந்தமாக வாங்கினேன் என்பதற்கு அது அர்த்தம் ஆகாது. வாடகை வீடு என்று எண்ணக்கூடாதா?. தீயவர்கள் மோசமான கருத்துக்களை கூறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.