நடிகை கஸ்தூரி கர்ப்பமாக இருக்கிறாரா... வைரல் புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்...Actress kasthuri latest photo viral

தமிழ் சினிமாவில் 90 களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கஸ்தூரி. இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

kasthuri

தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் புதிய தொடக்கம், இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம். என் நலன் விரும்பிகளுக்கு நன்றி என கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இவர் உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாரா அல்லது கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறாரா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.