சினிமா

கருவாப்பையா பாடல் புகழ் கார்த்திகாவை ஞாபகம் இருக்கா!! அவரது தற்போதை நிலை என்ன தெரியுமா?

Summary:

தமிழ் சினிமாவில் தூத்துக்குடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கார்த

தமிழ் சினிமாவில் தூத்துக்குடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் தூத்துக்குடி கார்த்திகா என அழைக்கப்பட்டார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கருவாப்பையா என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து இவரை பெருமளவில் பிரபலமடைய வைத்தது. மேலும் இவரது வசீகரமான முகம் தமிழ் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து பிறப்பு என்ற படத்தில் நடித்த கார்த்திகா, உலக அழகி நான்தான் என்ற பாடல் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலம் அடைந்தார். இவ்வாறு ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் கார்த்திகா கொஞ்ச நாளிலேயே பரிச்சயமான ஒருவராக ரசிகர்கள் மனதில் பதிந்தார்.

நடிகை கார்த்திகாக்கான பட முடிவுகள்

இந்தநிலையில் தனது தங்கையின் படிப்பிற்காக மும்பை சென்ற அவர் நீண்ட காலம் சினிமாவிருந்து விலகி இருந்தார்.  அதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னை வந்த அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் சினிமாவில்  ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement