பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
என்னது.. பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு இப்படியொரு பிரச்சினையா! செம ஷாக்கான ரசிகர்கள்!!
பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில், பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கரீனா கபூர். அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் சயிப் அலி கானை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு தைமூர் அலிகான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. கரீனா கபூர் தற்போது நடிகர் ஆமிர் கானின் அடுத்த படமான லால் சிங் சத்தாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது நெருங்கிய தோழியான நடிகை அம்ரிதா அரோராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி கரீனா கபூர் மற்றும் அம்ரிதா இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் இதன் காரணமாகவே அவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.