வாழ்க்கையில் பிரிந்தாலும் நினைவில் பிரியேன் - சாண்டி குறித்து மனம் திறந்த முதல் மனைவி காஜல்.! Actress Kajal Pasupathi Says about First Husband Sandy

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தவர் காஜல் பசுபதி. இவர் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முதன்முதலாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுக காஜல், ஜீவா நடிப்பில் வெளியான டிஸ்யூம் படத்தில் கதாநாயகியின் தோழியாகவும் நடித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற படத்திலும் நடித்திருக்கிறார். நடன இயக்குனரான சாண்டியை காஜல் பசுபதி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தனிப்பட்ட காரணத்திற்காக இருவரும் பிரிந்தனர். சாண்டி மற்றொரு பெண்ணை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

cinema

காஜலோ திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் நிலையில், சாண்டிக்கு நல்ல தோழியாகவும் இருந்து வருவதாக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்தோம். எங்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தோம். 

நாங்கள் பிரிவதற்கு அது முக்கிய காரணமாகவும் இருந்து விட்டது. அடிக்கடி ஏற்பட்ட சண்டை பிரிவை கொண்டு வந்து விட்டது. சாண்டியை பிரிந்தாலும் அவர் நினைவில் எப்போதும் இருக்கிறேன். அதனால் தான் அவர் நினைவாக கையில் போட்ட டாட்டூவையும் அழிக்காமல் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.