என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
புதுப்பொண்ணுக்கு கல்யாண குஷியில் முகமெல்லாம் சிவந்துபோச்சு.. வைரலாகும் ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..

கல்யாண குஷியில் நடிகை ஹன்ஷிகாவின் கன்னமெல்லாம் சிவந்துபோன புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய், சூர்யா என பல்வேறு தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து, உச்சத்தில் இருந்தவர் நடிகை ஹன்சிகா. இவரது கொழுகொழுவென குழந்தை போல் இருக்கும் இவரது அழகிற்கும், துறுதுறுப்பான நடிப்பிற்கும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஆனால் தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவருகிறார் அம்மணி. அதுபோக உடல் எடையை குறைக்கிறேன் என கூறி, தற்போது எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். இந்நிலையில் ஹன்ஷிகாவிற்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துவருவதாக கூறப்படுகிறது.
விரைவில் ஹன்ஷிகா திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அம்மணியின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. கல்யாண குஷியில் நடிகை ஹன்ஷிகாவின் கன்னமெல்லாம் சிவந்துபோன புகைப்படம்தான் அது. இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.