96 பட நடிகைக்கு கொரோனா உறுதி! அவரே வெளியிட்ட தகவலால் செம ஷாக்கில் ரசிகர்கள்!

Summary:

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் ஆரம்பித்த கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையி

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் ஆரம்பித்த கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமெடுத்துள்ளது. இத்தகைய கொரோனா தொற்றுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற 96 படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். அதனைத் தொடர்ந்து அவர் மாஸ்டர் மற்றும் தனுஷின் கர்ணன் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  எனக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் தனிமையில் இருக்கிறேன். கடந்த இரு வாரங்கள் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அறிகுறி தெரிந்தால் தயவுசெய்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார். 


Advertisement