அட அட.. எம்புட்டு அழகு.. ஹீரோயின்களையே ஓரம் கட்டிய நம்ம குட்டி ஜானு... ஆர்ப்பரிக்கும் அழகில் உள்ள கௌரி கிஷான் புகைப்படங்கள்!actress-gourigkishan-cute-photo

96 பட நாயகி குட்டி ஜானுவின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தில் பள்ளி பருவ ஜானுவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷான்.

காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரின் பள்ளி பருவ காதல்கள் நியாபகத்திற்கு வந்து போயின. அந்த வகையில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம்.

Gowri kissan

மேலும் கௌரி கிஷான் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும் மலையாளம் திரைப்படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்துவரும் இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.