வாவ்.. அடுத்த ஹீரோயின் ரெடி! நடிகை கெளதமியின் மகளை பார்த்தீங்களா.! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

வாவ்.. அடுத்த ஹீரோயின் ரெடி! நடிகை கெளதமியின் மகளை பார்த்தீங்களா.! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!


actress-gawthami-daughter-photos-viral

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. இவர் தமிழில் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த குருசிஷ்யன் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் கமல், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். கௌதமி இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பாபநாசம் படத்தில்  கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கௌதமி கடந்த 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1999 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். அதனைத் தொடர்ந்து கௌதமி நடிகர் கமலுடன் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பின்னர் சில பிரச்சினைகளால் அவர்கள் பிரிந்து விட்டனர். கெளதமியின் மகள் சுப்புலக்ஷ்மி சினிமாவில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக பல தகவல்கள் பரவியது. இந்த நிலையில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.