
பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற ஒரே சீரியலில் நடித்ததன் மூலம் த
பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற ஒரே சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இவர் வெள்ளிதிரையில் பல படங்களில் நடித்திருந்தாலும் கோலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடையே அதிகம் கொண்டாடப்பட்டார்.
கோலங்கள் சீரியலை தொடர்ந்து அவரை எந்த ஒரு தொலைக்காட்சியிலும் பார்க்க முடியாமல் இருந்தது. தற்போது நடிகை தேவயானி புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கவிருக்கும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் மூலம் மீண்டும் சின்னத்திரை பக்கம் வருகிறார் தேவயானி. அந்த சீரியலில் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement