சேலையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை தேவயானியின் மகள்... வைரலாகும் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்!!

சேலையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை தேவயானியின் மகள்... வைரலாகும் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்!!


Actress devaiyani daughter photo viral

தமிழ் சினிமாவில்  அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை தேவயானி. அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது  ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

Devayani

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தேவயானி அவ்வப்போது தனது மற்றும் குடும்ப புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சேலையில் அழகு தேவதையாய் ஜொலிக்கும் தனது மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.