நடிகை தேவதர்ஷினியின் மகளா இது.. தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி.?
தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக பிரபலமாக இருப்பவர் தேவதர்ஷினி. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களின் நடித்து கலக்கி வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இதன் பின்பு படிப்படியாக தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். மேலும் சின்னத்திரையில் சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் சின்னத்திரையில் முதன் முதலில் அத்திப்பூக்கள், மர்மதேசம் போன்ற சீரியலின் மூலம்
பிரபலமடைந்தார். இவ்வாறு திரைத்துறையில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் போது 2002ஆம் ஆண்டு சக நடிகரான சேத்தன் என்பவரை மணமுடித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.
இது போன்ற நிலையில், தேவதர்ஷினியின் மகளான நியாதி தற்போது திரைப்படங்களின் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் 96 திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நியாதி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடுத்து ஹீரோயின் ரெடி தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.