புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை அனுஷ்கா.! அட.. இதுதான் காரணமா?? பரவும் தகவல்!!
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவனுடன் இணைந்து ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக அவர் நன்கு உடல் எடை அதிகரித்து இருந்தார். பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இப்படத்திற்கு பிறகு அவர் பிரபாஸ் உடன் இணைந்து பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் செம ஹிட்டானது.
பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் சாஹோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் நடித்திருந்தார். ஆனால் அப்படத்தில் முதலில் அனுஷ்காவே ஹீரோயினாக நடிக்கவிருந்ததாகவும், அவரது உடல் எடை காரணமாக அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதையும் படிங்க: உண்மைதான்.. சில தவறுகளை செய்திருக்கேன்.! மனம்திறந்து ஃபீல் செய்த நடிகை சமந்தா!!
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!