48 வயது நடிகருக்கு 4-வது மனைவியான பிரபல தமிழ் நடிகை..! உருக்கத்துடன் விவாகரத்து குறித்து ஓபன்டாக்.!!

48 வயது நடிகருக்கு 4-வது மனைவியான பிரபல தமிழ் நடிகை..! உருக்கத்துடன் விவாகரத்து குறித்து ஓபன்டாக்.!!


Actress Anju married 48 aged Villan actor Divorce Open Talk

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற பேபி அஞ்சு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின் வளர்ந்த பிறகு பாப்கார்ன், கேளடி கண்மணி, மிலிட்டரி, மதயானை கூட்டம், அபிராமி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

இதன் பின்னர் பிரபல நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் 1996 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். இவர்களுக்கு 25 வயதுடைய மகன் உள்ளார். டைகர் பிரபாகர் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அன்புக்கு நான் அடிமை, பாண்டியன், முத்து போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இதுவரையிலும் இவர் அல்போன்சா மேரி, நடிகை ஜெயமாலா உட்பட 3 பேரை திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்காவதாக அஞ்சுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டைகர் பிரபாகரை காதலித்தபோது அஞ்சுவுக்கு வயது 17. 

Actress Anju

டைகர் பிரபாகருக்கு வயது 48. அத்துடன் கடந்த 2001 ஆம் ஆண்டு டைகர் மரணமடைந்தார். இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து பேசிய அஞ்சு, "எனது தந்தை வயதில் இருந்தவரை காதலித்தேன். குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறியும் மணந்தேன். 

அப்போதுதான் அவருக்கு முன்பே மூன்று திருமணங்கள் நடந்து பிள்ளைகள் என்னைவிட மூத்தவர்கள் என தெரிந்தது. நான் கர்ப்பமாக இருந்தபோது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றேன்" என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.