சினிமா

ப்பா.. இது உடம்பா இல்லை ரப்பரா! ஆண்ட்ரியாவின் புகைப்படங்களை கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் பின்னணிப் பாடகியாக களமிறங்கி, பின்னர் பச்சைக்கிளி முத்துச்சர

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் பின்னணிப் பாடகியாக களமிறங்கி, பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதனை  தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் அவர் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் அண்மையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.


இந்த நிலையில் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார். இந்த நிலையில் அவர் தனது உடலை நன்கு வளைத்து உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் இது உடம்பா இல்லை, ரப்பரா.. இப்படி அசால்ட்டா வளைக்கிறீங்க என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


Advertisement