சினிமா

யார் அந்த அரசியல்வாதி - நடிகர்? காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஆண்ட்ரியா!

Summary:

Actress andrea talks about rumor

நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும், அதில் தன்னை காதலித்து ஏமாற்றிய ஒரு நபர் பற்றி எழுதி இருப்பதாகவும், அந்த நபர் ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதி என அவர் கூறியதாகவும் கடந்த சில மாதங்களாக செய்திகள் உலா வந்தன.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆண்ட்ரியா, நான் பேசிய நிகழ்ச்சியில் பத்ரிக்கையாளர்கள் யாரும் இல்லை. கேமரா எதுவும் இல்லை. அதனால் என் வாழ்க்கை பற்றி சில விஷயங்களை வெளிப்படையாக பேசினேன். நான் நடிகை என்பதையே மறந்துவிட்டேன். அது தவறு என பின்பு தான் புரிந்தது.

மேலும், புத்தகத்தில் உள்ள ஒரு கவிதையை படித்தேன், அந்த கவிதை எதை பற்றியது என கேட்டதற்கு அந்த கவிதை என்னுடைய மோசமான ஒரு காதல் பற்றியது என கூறினேன்.10 வருடங்களுக்கு முன்பு இருந்த காதல் அது. 10 வருடம் முன்பு தான் அந்த கவிதையை  எழுத்தினேன்.

10 வருடத்திற்கு முன்பு நான் எழுதியது தற்போது நான் பேசியதுபோல் பரப்பிவிடப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது கோவம்தான் வருகிறது. கட்டுகதைபோல் பரவிய வதந்திக்கு தான் எப்படி விளக்கம் கொடுப்பது என தெரியாமல்தான் விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.


Advertisement