சினிமா

நடிகர் அஜித்தை பார்த்தாலே அது தோன்றும். நடிகை அமலாபால் ஓபன் டாக்!

Summary:

Actress amalapaul statement about thala ajith

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். பலவிதமான கருத்துக்களை பெற்றது சிந்து சமவெளி திரைப்படம். அதை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்தார் அமலாபால். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.

நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் அமலாபால். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் AL விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருநாம செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் நடிகை அமலாபால். இவர் நடிப்பில் ஆடை என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகை அமலாபால் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி ஒன்றின் ஒரு பகுதியாக நடந்த விளையாட்டில் Mr.செக்ஸி என்றால் யாரை கூறுவீர்கள் என அமலாபாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தல அஜித் என கூறிய அமலாபால் அஜித்தை பார்க்கும் போது அவர் மிகவும் செக்ஸியானவர் என்பது நமக்கே தோன்றும் என தெரிவித்துள்ளார்.


Advertisement