இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
30 வருஷத்திற்கு பிறகு மீண்டும் தமிழ்சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா! ஹீரோ இவர்தானா? வெளியான சூப்பரான தகவல்!

தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு வெளியான 'மைதிலி என்னை காதலி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என அடுத்தடுத்ததாகப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் 1992 ஆம் ஆண்டு முன்னணி நடிகரான நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது ஏறக்குறைய 30 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கஉள்ளார். அதாவது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ஷர்வானந்த் மற்றும் அவருக்கு ஜோடியாக ரிதுவர்மா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.