அழகு ராணி... உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை.. ஆலியாவின் வைரல் புகைப்படம்!actress-alyamanasa-latest-cute-photo

சீரியல் நடிகை ஆலியா மானசாவின் கியூட்  புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். அதில் சீரியல் நடிகை ஆலியா மானசாவும் ஒருவர். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதில் ஆலியா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் அந்த தொடரில் கதாநாயகனகா நடித்த சஞ்சீவை மணந்து தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ராஜா ராணி தொடர் முடிவடைத்துள்ளதால், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் ராஜா ராணி 2 ஆம் பாகத்தில் பாகத்தில் நடிகர் சித்துக்கு ஜோடியாக  ஆலியா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில்  நடித்து வருகிறார். மேலும் இத்தொடர் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், அழகு ராணி போன்று ஜொலிக்கும் உடையில் உள்ள கியூட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.