கண்ணீருடன் லைவ் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகை.. காரணம்தான் என்ன?..! சோகத்தில் ரசிகர்கள்..!!Actress akansha Dubey post live video before her suicide

உத்திரபிரதேசத்தில் உள்ள வாரணாசி பகுதியில் நாயக் என்ற படத்தின் படப்பிடிப்பானது நடந்து வந்தது. காலை 9 மணிக்கு படப்பிடிப்பிற்காக ஏற்பாடுகள் அனைத்தும் நடந்துவந்தன. 

மேக்கப்மேன் நடிகை அகன்ஷா துபேவை அழைக்க அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றபோது அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு பேரதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவள்துறையினர் அகன்ஷா எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகை தனது தற்கொலைக்கு முன்பு நேரலை வீடியோவில் வந்துவிட்டு, எதுவும் பேசாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதனால் அவர் எதற்காக நேரலை வந்தார்? ஏன் அதில் பேசவில்லை? அவர் எதற்காக சோர்வுடன் காணப்பட்டார் என பல கேள்விகள் எழுந்துள்ளன.