பிக்பாஸ்ல ரொம்ப பொய் சொல்லி ஏமாத்துறாங்க.. வேணும்னே எலிமினேட் பண்றாங்க - கொந்தளித்த பிரபல நடிகை..! சேனல் மீது குற்றச்சாட்டு..!!

பிக்பாஸ்ல ரொம்ப பொய் சொல்லி ஏமாத்துறாங்க.. வேணும்னே எலிமினேட் பண்றாங்க - கொந்தளித்த பிரபல நடிகை..! சேனல் மீது குற்றச்சாட்டு..!!


Actress abinayasri angry about biggboss

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 6 முன்பே தொடங்கி மூன்று வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில், அதில் போட்டியாளராக தளபதி விஜய்யின் ஃபிரண்ட்ஸ் பட நடிகை அபிநயா ஸ்ரீ கலந்து கொண்டார்.

bigg boss season 6

அவர் உள்ளே சென்ற இரண்டாம் வாரமே எலிமினேட்டாகினார். தொடர்ந்து அவர் போன வேகத்திலேயே வெளியேறிய நிலையில், அது குறித்து கோபமாக பேட்டியளித்திருக்கிறார். அதில் அபிநயாஸ்ரீ, "தன்னை நிகழ்ச்சியில் காண்பிக்கவே இல்லை என்று புகார் அளித்துள்ளார். 

bigg boss season 6

அது குறித்து அவரது அம்மா சேனலுக்கு போன் செய்து கேட்டுள்ளாராம். லிஸ்டில் இருந்தாலும் தான் சேஃப்டியாகதான் இருந்ததாகவும், ஆனால் சேனலுக்கு வேண்டியவர்களை மட்டும் அவர்கள் வைத்துக்கொண்டு மற்றவர்களை எலிமினேட் செய்து விடுகிறார்கள். 

ரசிகர்களின் ஓட்டு அடிப்படையில் தான் எலிமினேஷன் என பொய் சொல்கிறார்கள்" என்று கூறியுள்ளார். மேலும் "தமிழில் கமல்ஹாசன் அனைவரிடமும் பேசுகிறார். ஆனால் தெலுங்கில் அப்படி கிடையாது. வேண்டியவர்களிடம் மட்டும் தான் பேசுகிறார்கள்" என்று அபிநயா ஸ்ரீ குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.