சினிமா

கொரோனா வார்டில் நர்சாக சேவைபுரிந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படத்தை கண்டு பதறிப்போன ரசிகர்கள்!

Summary:

நர்சாக பணியாற்றிய நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் தங்கை, தோழி போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிகா மல்கோத்ரா. வர்தமான் மஹாவீர் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்த அவர் இந்தியாவில் கொரோனா பரவி தீவிரமான நிலையில், கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்காக மீண்டும் நர்சிங் பணிக்கே  சென்றார்.

மேலும் நர்சாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக  உள்ளேன். எனவே தயவு செய்து அனைவரும் வீட்டில் இருங்கள். அரசுக்கு ஆதரவு அளியுங்கள் எனவும் அப்பொழுது அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு ஒரு நர்சாக கொரோனா காலத்தில் நோயாளிகளை கவனித்து வந்த ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் அளவு குறைந்ததால்
அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.


மேலும் நான் மிகவும் கவனமாக இருந்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது இன்ஸ்ட்ராகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


Advertisement