தங்களை மீட்க உதவிய காரம்பாக்கம் மக்களுக்கு மனமார்ந்த நன்றி: விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி.!

தங்களை மீட்க உதவிய காரம்பாக்கம் மக்களுக்கு மனமார்ந்த நன்றி: விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி.!


actor-vishnu-vishal-thanks-to-karampakkam-peoples

 

மிக்ஜாம் புயலின் காரணமாக தலைநகர் சென்னையானது வெள்ளத்தில் தத்தளித்து, தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழை நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. 

நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டை சூழ்ந்துள்ள வெள்ள நீர் பாதிப்பை X தளத்தில் வெளியிட்டு உதவியும் கேட்டிருந்தார். விரைந்து சென்ற மீட்பு படையினர், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.

Actor Vishnu Vishal

இவர்கள் மீட்கப்பட்ட செய்தியை அறிந்த நடிகர் அஜித்தும், இருவரையும் நேரில் சென்று சந்தித்து இருந்தார். இந்நிலையில், தங்களுக்கு உதவிய காரம்பாக்கம் மக்களுக்கு நன்றி என விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.