நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் சிம்பிளாக நடைபெற்ற கொண்டாட்டம்! அவர் மகன் எப்படி வளர்ந்துட்டாரு பார்த்தீங்களா!!

நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் சிம்பிளாக நடைபெற்ற கொண்டாட்டம்! அவர் மகன் எப்படி வளர்ந்துட்டாரு பார்த்தீங்களா!!


Actor vishnu vishal son photo viral

தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தை தொடர்ந்து அவர் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் நடித்த படங்கள் பல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் அடித்தது.

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் விஷ்ணு விஷால் தனது மகன் மீது மிகுந்த அன்புடன் இருந்து வருகிறார். இந்தநிலையில் அண்மையில் அவர் தனது மகனின் பிறந்தநாளை மிகவும் எளிமையாக தன் வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.