சினிமா

விஷாலுக்கு எப்போது, எங்கு திருமணம் தெரியுமா? அதிகாரபூர்வ தகவல்!

Summary:

Actor vishal talks about his marriage

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக திருமணம் நடைபெறாத பிரபல நடிகர்களில் விஷாலும் ஒருவர். இந்நிலையில் விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியும், விஷாலும் நீண்ட வருடங்களாக காதலிப்பதாகவும், பின்னர் ஒருசில சண்டையால் பிரிந்த இவர்கள் பின்னர் மீண்டும் ராசியாகிவிட்டதாகவம் செய்திகள் வந்தது.

வரலட்சுமி என் உயிர் என நடிகர் விஷால் வசனமெல்லாம் பேசினார், இந்நிலையில் விஷால் நடிகை வரலட்சுமியை மீண்டும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அயோக்யா படப்பிடிப்பில் இருந்த விஷாலிடம் இதுகுறித்து கேட்டபோது எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்பது உண்மைதான். இது காதல் திருமணம். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது உண்மையில்லை. நாளை  தான் இதுகுறித்து பேச உள்ளனர். இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். 

மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும் என்று கூறினார்.
 


Advertisement