தன் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான அந்த நாள்.! குரு அர்ஜுன் சாருக்கு நன்றி.! நடிகர் விஷால் நெகிழ்ச்சி பதிவு!!actor-vishal-remember-18-years-of-sandakozhi-movie

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். கடந்த 2005ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விஷாலை ஒரு ஆக்சன் ஹீரோவாக திரையுலகில் அறிமுகம் செய்தது சண்டக்கோழி திரைப்படம். இத்திரைப்படம் விஷாலின் கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின்,  ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் விஷால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், 18 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 16ஆம் தேதி சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலமாக திரையுலகில் நான் ஒரு ஆக்சன் ஹீரோவாக தனது பயணத்தை துவங்கிய அந்த நாளை என்னால் நம்ப முடியவில்லை. எனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அன்று தொடங்கி இன்று வரை நான் என்னை திரும்பி பார்க்காததற்கு ஒரே காரணம் பார்வையாளனாக இருந்த என் மீது நீங்கள் பொழிந்த அன்பும் ஆதரவும் தான்.

கடவுள்கள் போன்ற எனது பெற்றோர்கள், எனக்கு மேலே உள்ள கடவுள், என்னை நம்பிய இயக்குனர் லிங்குசாமி, உலகெங்கும் என்னை பார்க்கும் ரசிகர்களாகிய கடவுள்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை ஜி.கே ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் உங்கள் இருவருக்குமே எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களது கனவை தொடர்வேன். உங்களுக்கு நன்றி சொல்வது மட்டும் போதாது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார்.