சினிமா

ஊரடங்கில் எளிமையாக நடந்த சன்டிவி சீரியல் நடிகரின் திருமணம்! மணப்பெண் இவங்கதானா. ! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!

Summary:

Actor vijith rudhran marriage done in lockdown

நாடு முழுவதும் கொரனோ வைரஸ் பரவி நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும் விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஏராளமான திருமணங்கள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது.

 மேலும் திருமணத்தில் 50-க்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொதுமுடக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் மிகவும் எளிமையான முறையில் குடும்பத்தினர், உறவினர்கள்,  நண்பர்கள் முன்னிலையில் திருமணம்  நடைபெற்றுள்ளது. இவ்வாறு சன் தொலைக்காட்சி சீரியல் நடிகருக்கும் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ரன். இதில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜித் ருத்ரன். இவருக்கு ஊரடங்கில்  மிகவும் எளிமையாக விஷ்வ வினோதினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தகைய புகைப்படங்களை விஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 


Advertisement