திடீரென மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்! ஏன்? அவருக்கு என்னாச்சு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

திடீரென மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்! ஏன்? அவருக்கு என்னாச்சு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!!


actor vijayakanth admitted in hospital

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் கூட அவர் சிகிச்சை பெற்றார். மேலும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மீண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து தேமுதிக உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பதட்டம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தேமுதிக தலைமை அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தேமுதிக நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.