சினிமா

ரசிகர் ஒருவற்கு தளபதி விஜய் எழுதிய கடிதம்! கடிதம் உள்ளே என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Summary:

Actor vijay wrote letter to his fans

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய். இவர் மிகவும் அமைதியானவர் என்று பலரும் கூற நாம் கேட்டிருப்போம். அதேபோன்று இவர் மிகவும் அன்பானவர் கூட. அதே வேளையில் அவர் மற்றவர்களின் சாதனை வாழ்த்த தவறுவதில்லை.

இதற்கு உதாரணமாக பலவற்றை சொல்லலாம். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள்  ஜூன்22-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது . விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகளை செய்தனர். 

இதை பார்த்து வியந்த நடிகர் விஜய் எனது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் செய்த உங்கள் அனைவர்க்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

தளபதி விஜய்யிடமிருந்து வந்த கடிதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Advertisement