சினிமா

அடேங்கப்பா! தனது ரசிகருக்காக தளபதி விஜய் என்ன செய்துள்ளார் தெரியுமா?

Summary:

Actor vijay enjoying with his fan child

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது சர்க்கார் திரைப்படம். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. படம் முழுக்க முழுக்க அரசியல் பற்றி பேசுவதால்  படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் அரசியல் படம் என்பதை டீசர் உறுதி செய்துள்ளது. இதனிடையே விஜய் அவரது ரசிகர் ஒருவரின் குழந்தையுடன் கொஞ்சும் வீடியோ இனியத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகர் விஜய் தனது பிஸியான நேரத்திலும் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குபவர். சமீபத்தில் அவர் தன் மகளுடன் கனடாவில் உள்ள தனியார் உணவகத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலானது. சர்கார் படம் முடிந்து ரிலீஸூக்குத் தயாராக உள்ளது.

இந்த இடைவெளியில், இளைப்பாறிக்கொண்டிருக்கும் விஜய், குழந்தை ஒன்றுடன் கொஞ்சும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தன் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார். இதை அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.Advertisement