நடிகர் விஜயின் கல்லூரி கால தோழர்கள்..! விஜய் கல்லூரி படிக்கும்போது எடுத்த புகைப்படங்ளை வெளியிட்ட நண்பர்..! எப்படி இருக்கார் பாருங்க..!

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். நாளைய தீர்ப்பு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்த இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாகாமல் தடைபட்டுள்ளது. இந்நிலையில், விஜய் கல்லூரி படிக்கும் காலத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவரது நண்பரும், சீரியல் நடிகருமான சஞ்சீவ்.
விஜய் சென்னையில் உள்ள லொயோலா கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே விஜய், சஞ்சீவ் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். தங்கள் நட்பை பற்றி இருவரும் பலமேடைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது சஞ்சீவ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.