சினிமா

திடீரென ரகசியமாக தனது திருமணத்தை முடித்த பிரபல இளம் நடிகர்! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

திடீரென ரகசியமாக தனது திருமணத்தை முடித்த பிரபல இளம் நடிகர்! தீயாய் பரவும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வெற்றி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகனாக திகழ்பவர் வெற்றி. இவர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் அவருடன் எம்.எஸ் பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் வெற்றி ஜீவி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் கடந்த ஆண்டு ஸ்ரீகந்தன் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த வனம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் வெற்றியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் வெற்றி எந்த அறிவிப்புமின்றி ரகசியமாக, எளிமையாக தனது திருமணத்தை திருநெல்வேலியில் நடத்தி முடித்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.


Advertisement