சினிமா

நான் நடிச்ச இந்த காமெடி இப்போ உலகம் முழுதும் நிஜமா நடக்குதே! வைரலாகும் நடிகர் வடிவேலுவின் வீடியோ!!

Summary:

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருக

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொடிய வைரசால் ஒட்டுமொத்த உலகமே முடங்கிப் போய்க் கிடக்கிறது. மேலும் திரையுலகில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் வடிவேலுவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், தற்போது கொரோனா என்ற ஒன்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது. இதுவரை யாருமே இப்படியொரு நிலையை பார்த்ததில்லை. மேலும் இப்பொழுது படத்தை தயாரிக்கவும், நடிப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. ஆனால் இறைவன் கொரோனா என்னும் திரைப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார். 

இந்த படத்தை வெளியே வாராமல், எல்லோரும் வீட்டில் இருந்து பார்க்க வேண்டும். நாம் ஒரு படத்தை ரிலீஸ் செய்தால் மக்கள் அதை தூக்குவார்கள். ஆனால் இறைவன் ரிலீஸ் செய்த இந்த படத்தை அவனேதான் தூக்க வேண்டும். சீக்கிரம் இந்த நிலைமை மாற வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் வீட்டிலேயே சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என ஒரு படத்தில் காமெடியாக நடித்திருப்பேன். ஆனால் இன்று கொரோனோவால் எல்லாரும் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது படத்தில் காமெடியாக நடிச்சது இப்ப ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொருந்தியுள்ளது. வீட்டைவிட்டு வெளியே போகாதீர்கள். அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி உங்களையும், குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.


Advertisement