அடேங்கப்பா.. நடிகர் சூர்யாவின் மகளா இது! எப்படி வளந்துட்டாரு பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!

அடேங்கப்பா.. நடிகர் சூர்யாவின் மகளா இது! எப்படி வளந்துட்டாரு பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!


actor-surya-with-family-in-aitport-video-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அவர் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் கைவசம் தற்போது பாலாவின் கூட்டணியில் வணங்கான், வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்கள் உள்ளன. சூர்யா நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்தில் நடிகர் சூர்யா தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகர் சூர்யாவின் மகளா இது.! நன்கு வளந்துட்டாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.